/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.கே.டி., சாலை வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா
/
வி.கே.டி., சாலை வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா
வி.கே.டி., சாலை வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா
வி.கே.டி., சாலை வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்கப்படுமா
ADDED : ஏப் 23, 2024 06:08 AM

சேத்தியாத்தோப்பு, : வி.கே.டி., சாலையில் நங்குடி அருகே வேகத்தடையில் பிரதிபலிப்பான் அமைக்காததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் புதிய பைபாஸ் சாலை பணிகள் நடந்து வரும் நிலையில், இச்சாலையில் சேத்தியாத்தோப்பு அருகே விபத்துக்களை தடுக்க நங்குடி என்ற இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேகத்தடை இருப்பதை உணர்த்தும் வகையில் பிரதிபலிப்பானோ, வெள்ளை நிற வர்ணம் அடிக்கவில்லை.
இச்சாலையில் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். இவைகள், வேகத்தடை தெரியாமல், வேகமாக செல்வதால், பஸ் குலுங்கி, பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், விபத்துகளில் சிக்கி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 5ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடையில் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வேகத்தடையில் பிரதிபலிப்பான் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

