/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மந்தாரக்குப்பத்தில் முதல்வருக்கு வரவேற்பு
/
மந்தாரக்குப்பத்தில் முதல்வருக்கு வரவேற்பு
ADDED : பிப் 22, 2025 10:14 PM

மந்தாரக்குப்பம், : கடலுார் மாவட்டத்தில் நடந்த அரசு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க.. சார்பில் மந்தாரக்குப்பத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெய்வேலி மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் வழியாக, வேப்பூர் அருகே திருப்பயரில் நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கு சென்ற முதல்வருக்கு, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ராயர், திருமாவளவன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் சாலையில் இருபுறமும் நின்று வரவேற்பு அளித்தனர். ஏராளமான பொதுமக்கள் முதல்வரிடம் மனு அளித்தனர்.