/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்; சிறுபாக்கத்தில் அமைச்சர் வழங்கல்
/
ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்; சிறுபாக்கத்தில் அமைச்சர் வழங்கல்
ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்; சிறுபாக்கத்தில் அமைச்சர் வழங்கல்
ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள்; சிறுபாக்கத்தில் அமைச்சர் வழங்கல்
ADDED : மார் 12, 2025 11:52 PM

சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ரூ. 1.30 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினர். சப் கலெக்டர் சையத் முகமது முன்னிலை வகித்தார்.
தாசில்தார் மணிகண்டன் வரவேற்றார். அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு, 345 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, 3 சக்கர வாகனம் உட்பட ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின், அவர் பேசுகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அதேபோல், மற்றவர்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களுக்கு உரிய சான்று வழங்கி விண்ணப்பித்து பயன்பெறலாம். மாணவர்களின் உயர்கல்விக்கு முன்னுரிமை அளித்து வாழ்வில் முன்னேற தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்படும் என்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன், பி.டி.ஓ., முருகன், தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சங்கர், நிர்வாகிகள் நிர்மல்குமார், ராமதாஸ், வெங்கடேசன், மருதமுத்து, ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.