/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராம உதவியாளர்கள்நியமன கோப்பு எங்கே பண்ருட்டியில் வெடிக்குது 'பூகம்பம்'
/
கிராம உதவியாளர்கள்நியமன கோப்பு எங்கே பண்ருட்டியில் வெடிக்குது 'பூகம்பம்'
கிராம உதவியாளர்கள்நியமன கோப்பு எங்கே பண்ருட்டியில் வெடிக்குது 'பூகம்பம்'
கிராம உதவியாளர்கள்நியமன கோப்பு எங்கே பண்ருட்டியில் வெடிக்குது 'பூகம்பம்'
ADDED : மே 15, 2024 01:11 AM
பண்ருட்டி தாலுகா பகுதிகளில், 31 கிராம உதவியாளர்கள் பணிகளை நிரப்ப கடந்த 10.10.2022ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி, 14.01.2023ல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிய விபரம் கேட்டு, தகவல் உரிமை சட்டத்தில், பண்ருட்டி அடுத்த அழகப்பசமுத்திரத்தை சேர்ந்த தைரியலட்சுமி என்ற பெண் மனு செய்தார்.
மாநில தலைமை தகவல் ஆணையத்திலும் அவர் மனு கொடுத்தார்.
இது தொடர்பாக, கடந்த ஏப்., 24ம் தேதி நடந்த மாநில தகவல் ஆணைய கூட்டத்தில், பண்ருட்டி தாலுகா அலுவலக பொது தகவல் அலுவலர் பாலமுருகனிடம் கேள்வி எழுப்பட்டது.
அப்போது, கடந்த 14.01.2023ல் 31 கிராம உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கியதற்கான கோப்புகள் இல்லை. 22.04.2024 வரையில், தாலுகா அலுவலகத்தில், அப்போதைய தாசில்தார் ஒப்படைக்கவில்லை என தெரிவித்தார்.
அதையடுத்து, கிராம உதவியாளர்கள் பணிநியமன ஆணைக்கான கோப்பு ஒப்படைக்காதது குறித்து, கடலுார் கலெக்டர் விரிவான விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் உத்திரவிட்டுள்ளார்.
விசாரணை தகவலை, மாநில தகவல் ஆணையத்தில் வரும் ஜூன் 20ம் தேதிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், மாநில தகவல் ஆணையத்தில் இதற்கான விசாரணை வரும் ஜூன் 25ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்னை பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் பூதாகரமாகியுள்ளது.

