ADDED : செப் 10, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சர் பங்கேற்ற விழாவில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக சாமியானா துணி பந்தல் போடப்பட்டது. ஏராளமான மகளிர் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது திடீரென பலமான காற்று வீசியதில், மருத்துவ முகாம் பந்தல் அடியோடு பறந்து 10 துாரத்தில் விழுந்தது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர்.
அமைச்சர் வரும் நேரத்தில் பந்தல் பறந்ததால், அதிகாரிகள் பரபரப்படைந்தனர். அவசரமாக, பந்தலை நிமிர்த்தி வைத்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் நின்றனர். அதன் பிறகு பொதுமக்கள் அந்த கூடாரத்திற்குள் செல்ல அச்சப்பட்டு, யாரும் செல்லாததால் மருத்துவ முகாம் வெறிச்சோடியது.