/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு
/
கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு
கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு
கம்பி வேலியில் சிக்கிய மர நாய் விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : மார் 02, 2025 06:35 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கம்பி வேலியில் சிக்கிய மர நாயை வனத்துறையினர் மீட்டு, பாதுகாப்பாக ஏரியில் விட்டனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், காட்டுக்கூடலுார் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இதனை சுற்றி போடப்பட்ட கம்பி வேலியில் நேற்று அதிகாலை ஒரு வயது மர நாய் சிக்கி, மூச்சு விட முடியாமல் திணறியது. அவ்வழியே சென்றவர்கள் நரி என நினைத்து அச்சமடைந்தனர்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீஸ் ஏட்டு வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் சென்று, பொது மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன், ராம்குமார் ஆகியோர் கம்பி வேலியில் சிக்கிய மர நாயை லாவகமாக மீட்டு, கார்குடல் பெரிய ஏரி பகுதியில் விட்டனர்.
உடன் மர நாய் மின்னல் வேகத்தில் ஓட்டமெடுத்து காட்டுக்குள் மறைந்தது.