ADDED : செப் 10, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே வயிற்று வலி கொடுமையால் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமாபதி, 49; கூலித் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த அவர், கடந்த 8 ம் தேதி இரவு கலைகொல்லி மருந்தை குடித்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு புதுச்ேசரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தனர் நேற்று இறந்தார். அவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

