ADDED : செப் 10, 2024 06:37 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பானபூரி கடையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் அருள்முருகன், 20. இவர், கடந்த 8 ம் தேதி, தனது நன்பர்களுடன் பரவளூர் மெயின் ரோட்டில் உள்ள பானிபூரி கடையில் நின்றிருந்தார்.
அதே கடையில், மணவாளநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது நண்பர்கள் பாரதி, விஜயகுமார், ரகு ஆகியோர் பானிபூரி சாப்பிட வந்தனர்.
அங்கு, அருள்முருகனின் நண்பர்கள் கோகுல், கவுதம் தண்ணீர் ஊற்றி விளையாடினர். அந்த தண்ணீர் மோகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அருள்முருகன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் மோகன் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து, பாரதி, விஜய்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.