sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மலைத்தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிப்பு

/

 மலைத்தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிப்பு

 மலைத்தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிப்பு

 மலைத்தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிப்பு


ADDED : நவ 13, 2025 07:07 AM

Google News

ADDED : நவ 13, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: மலைத்தேனீக்கள் கொட்டியதில், 2 வயது குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மாமங்கலம் ஊராட்சியில் நேற்று நுாறுநாள் பணி நடந்தது. காலை 10:00 மணியளவில் மாமங்கலம் அய்யனார் குளம் சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

குளத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றியபோது மலைத்தேனீக்கள், வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களை துரத்தி கொட்டியது. பெண்கள் அலறியடித்து ஓடினர்.

இதில், அ தே பகுதியை சேர்ந்த பட்டு, 70; கலைவாணி, 40; ஜோதி, 56; சரசு, 39; குழந்தை நவனீஸ்வரன், 2 ; உள்ளிட்ட 10 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சோழத்தரம் தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன், சோழத்தரம் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us