/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செக் மோசடி வழக்கில் டாக்டருக்கு சிறை
/
செக் மோசடி வழக்கில் டாக்டருக்கு சிறை
ADDED : நவ 13, 2025 07:07 AM
பண்ருட்டி: பண்ருட்டியில், செக் மோசடி வழக்கில் சித்தா டாக்டருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் பார்த்தசாரதி. இவரிடம், கடலுார் அரசு சித்தா பிரிவு தலைமை டாக்டர் செந்தில்குமார் கடந்த 2021ல் தனது மகள் படிப்பு செலவிற்காக ரூ. 20 லட்சம் கடனாக வாங்கியிருந்தார்.
இப்பணத்திற்காக கடந்த 2021 ல் ஜூன் 6 ம்தேதி வங்கிக்கான தேதியிட்ட காசோலை வழங்கினார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் ரிட்டன் ஆனது.
இதுகுறித்து பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ல் வக்கீல் பார்த்தசாரதி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சித்தா டாக்டர் செந்தில்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நடுவர் மன்ற நீதிபதி மார்ஷல் ஏசுவதன் தீர்ப்பு கூறினார்.
மேலும், தர வேண்டிய பணம் ரூ. 20லட்சத்துடன் வட்டி ரூ.5.20 லட்சம் சேர்த்து, 25லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

