தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாடகை செலுத்தாத  10 கடைகளுக்கு 'சீல்'  

 வாடகை செலுத்தாத  10 கடைகளுக்கு 'சீல்'  

 வாடகை செலுத்தாத  10 கடைகளுக்கு 'சீல்'  


ADDED : ஜூலை 08, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 80 கடைகள் உள்ளன. இங்கு மாநகராட்சி மூலமாக மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகிறது. கடை உரிமையாளர்கள் பலர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல், 6 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி பல முறை அறிவுறுத்தியும் வாடகை செலுத்தாமல் உரிமையாளர்கள் காலம் தாழ்த்தினர்.

தொடர்ந்து, வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கும்படி மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று முதற்கட்டமாக 1 கோடியே 15 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ள 10 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us