/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் தொடர்கிறது! கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒன்று
/
கடலுார் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் தொடர்கிறது! கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒன்று
கடலுார் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் தொடர்கிறது! கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒன்று
கடலுார் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் தொடர்கிறது! கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒன்று
ADDED : ஜூலை 15, 2025 10:49 PM

கடலுார் ; கடலுார் மாவட்டத்தில் கோடை காலம் முடிந்தும் வெயில் குறையாமல் சதமடித்து வருவதால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி மே மாதம் முடிய கோடை வெயில் கடுமையாக தாக்கும். இந்த காலங்களில்தான் அக்னி நட்சத்திரம் வருவது வழக்கம். அதேப் போல இந்த ஆண்டு மே 4ம் தேதி அக்னி வெயில் துவங்கி மே 28ம் தேதி வரை நீடித்தது.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அக்னி நட்சத்திரத்தின்போது பெரிய அளவில் ஒன்றும் வெப்பம் அதிகரிக்கவில்லை. அதனால் பள்ளி திறக்கும் தேதி மாற்றம் இல்லாமல் ஜூன் முதல் வாரமே திறக்கப்பட்டது.
ஜூன் மாதம் சற்றும் எதிர்பாராத வகையில் 7ம் தேதி 99.5 டிகிரி வெயில் அடித்தது. ஜூன் 8ம் தேதி 101.8; 18ம் தேதி 100.4; 19ம் தேதி 100.9; 20ம் தேதி 101.8; ஜூலை 9ம் தேதி, 10ம் தேதி 101; 13ம் தேதி 101; நேற்று 100.8 டிகிரியாக பதிவானது.
வழக்கமாக அக்னி நட்சத்திரம் முடிந்து ஒருவாரம் வரையில் வெயில் நீடிக்கலாம். ஆனால் 2 மாதம் கழிந்த பின்னர் ஜூலையில் வெயில் சதமடிப்பது இதுவே முதல் முறை. இதனால் விதைப்பு செய்த நெல் கருகும் நிலை உள்ளது.
கத்தரி, வெண்டை, பூச்செடிகள் காய்ப்புத்திறன் குறைந்துள்ளது. கடும் வெப்பத்தினால் பூக்கள் கருகி விடுவதால் காய்பிடிப்பதில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கிய உடன் கடலுார் மாவட்டத்தில் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசும்.
அத்துடன் அவ்வப்போது மழை பெய்யும். கடந்த ஒரு மாதம் முன்பு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்துள்ளது. இருப்பினும் இங்கு வெப்பம் குறையவில்லை.
இதுகுறித்து வானவியலாளர் பாலமுருகன் கூறுகையில், 'மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்று தொடர்ந்து வீசி வருகிறது. கிழக்கில் இருந்து வீசக்கூடிய காற்று குறைந்து வருகிறது. அதனால் தான் வெப்பம் குறையாமல் அதிகளவில் உள்ளது. ஜூலையில் இந்தளவு வெப்பம் அதிகரிப்பு என்பது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒன்று.
அதிகபட்சமாக ஜூன் வரைதான் வெப்பம் 100 டிகிரியை தொடும். நாளை மறுநாள் கடலுார் மாவட்டத்தில் லேசான இடியுடன் கூடிய மழை இருக்கும். அதன் பின்னர் வெப்பம் படிப்படியாக தணியும்' என்றார்.

