/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
15 சவரன் நகை திருட்டு விருதை அருகே துணிகரம்
/
15 சவரன் நகை திருட்டு விருதை அருகே துணிகரம்
ADDED : ஆக 14, 2025 12:42 AM

விருத்தாசலம் : கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தேவன்குடியை சேர்ந்தவர் தேவே ந்திரன் மனைவி பத்மாவதி, 60; மகன்கள் இருவரும் திருமணமாகி வெளிநாட்டில் உள்ளனர். தனிமையில் வசித்து வந்த பத்மாவதி, கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, ஆடிப்பெருக்கு விழாவுக்கு டி.வி.புத்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
12ம் தேதி காலை வீட்டின் முன்புற கதவுகள் திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பத்மாவதி வந்து பார்த்த போது, முன்புற கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டு பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், 10 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
தகவலின்பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் புருனோ வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
பழைய குற்றவாளிகளின் கைரேகை பதிவாகி இருப்பதும், வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்தே பீரோவை உடைத்திருப்பதும் தெரிந்தது. இதனால், பத்மாவதி குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான நபர்களின் உதவியுடன், மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
பத்மாவதி அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.