/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.16 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை
/
மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.16 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை
மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.16 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை
மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.16 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை
ADDED : நவ 02, 2024 07:05 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்த ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
கடலுார் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது 137 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
கடைகள் எண்ணிக்கை குறைந்தாலும் விற்பனை பெரிய அளவில் குறையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது. ஒரு கடையை அப்புறப்படுத்தினால் அந்த கடையின் வியாபாரம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகரிக்கிறது.
டாஸ்மாக் கடைகள் மூலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1.50 கோடி ரூபாய்க்கு குறையாமல் விற்பனை நடந்து வருகிறது. மதுபாட்டில்கள் விற்பனை தீபாவளி பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பல பண்டிகைளில் அதிகளவு நடந்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கனமழை இல்லை.
அதனால் அனைத்து கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. கடந்த 30ம் தேதி (தீபாவளிக்கு முதல்நாள்) 7.65 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மறுநாள் 31ம் தேதி தீபாவளி பண்டிகையன்று 8 கோடி ரூபாய்க்கும் விற்பனையானது.
இவ்விரு நாட்களிலும் சேர்த்து 15.65 கோடி ரூபாய் அளவில் விற்பனை நடந்துள்ளது. அதேப்போல தமிழக வாடிக்கையாளர்களை நம்பி மாநில எல்லையில் வைத்திருக்கும் மதுக்கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வரும் காலங்களில் பண்டிகையின்போது இன்னும் மது விற்பனை கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.