/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
/
1912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ADDED : நவ 17, 2024 02:54 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அலுவலக கூட்டரங்கில் 1912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரியலுார் மாவட்டத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் 2ம் தொகுப்பை நேற்று துவக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கடலுாரில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் எம்.எல்.ஏ., ஐயப்பன், மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி 1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அனு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, பி.ஆர்.ஓ., நாகராஜபூபதி, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.