/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோதத்தில் வாலிபரை கொல்ல முயன்ற 2 பேர் கைது
/
முன்விரோதத்தில் வாலிபரை கொல்ல முயன்ற 2 பேர் கைது
ADDED : ஆக 29, 2025 03:03 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சித்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகன் ராஜேஷ்,29; பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் உதயக்குமார் மகன் முத்தமிழ்செல்வன்,27; இவர்களுக்கு முன்விரோதம் இருந்துவந்தது.
இந்நிலையில் ராஜேஷிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நலங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடந்தது. அப்போது வெடித்த பட்டாசு குப்பைகள் முத்தமிழ்செல்வன் வீட்டு வாசலில் விழுந்துள்ளது.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ராஜேஷ் ஆதரவாளர்கள் ஆகாஷ்,25; பாலாஜி. அரியலுார் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த குணசேகர் மகன் குணசுந்தர் ஆகியோரும் முத்தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் ஞானசேகரன் மனைவி சுந்தரி,30; வீரமணி மகன் விஷ்வா,24; ஆகியோர் இரு கோஷ்டிகலாக தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், ஆகாஷ் ஆகியோர் கண்ணாடி பாட்டிலை உடைத்து விஷ்வாவின் தலை, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தினர்.படுகாயமடைந்த விஷ்வாவை அங்கிருந்தவர்கள் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் ராஜேஷ், ஆகாஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.