ADDED : ஏப் 06, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : புதுச்சேரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்த 2 பேரை ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர்களை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பரங்கிப்பேட்டை அடுத்த கரிகுப்பம் ராமதாஸ் மகன் சந்தோஷ்,20; சாமிதுரை மகன் நாகப்பன்,20, என்பதும், புதுச்சேரியிலிருந்து கஞ்சா கடத்தி வந்தும் தெரிய வந்தது. இதுகுறித்து கடலுார் மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

