ADDED : டிச 30, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த 2 பைக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துாரை சேர்ந்தவர் பரத், 38; இவர், கடந்த 19ம் தேதி, தனது பல்சர் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு துாங்க சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதே போன்று, சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் அர்ஜூன், 27, என்பவரது பல்சர் பைக்கும் கடந்த 23ம் தேதி நள்ளிரவு திருடு போனது. இருதரப்பு புகார்களின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

