/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் பலி
/
மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் பலி
ADDED : அக் 16, 2024 07:13 AM
பெண்ணாடம் ; பெண்ணாடம் அருகே இருவேறு கிராமங்களில் அறுந்த கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசுங்கன்றுகள் இறந்தன.
பெண்ணாடம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று பகல் 12:00 மணியளவில் அதே பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, பாரி என்பவரது நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில், 2 வயதுடைய பசுங்கன்று சிக்கி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோன்று, பெண்ணாடம் அடுத்த எடையூர் காலனியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி சுமதி என்பவரது மாட்டுக்கொட்டகையில் அமைத்திருந்த மின் ஒயர் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 9 வயதுடைய பசுங்கன்று இறந்தது.
பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.