ADDED : செப் 27, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: டாஸ்மாக் கடைகளுக்கு அருகே மது குடிப்பவர்களுக்கு வாட்டர் பாட்டில் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் டாஸ்மாக் கடை மற்றும் வேகாக்கொல்லை டாஸ்மாக் கடை அருகே கடையில் மது குடிப்பவர்களுக்கு இடம் கொடுத்து, வாட்டர் பாட்டில் மற்றும் வாட்டர் கப் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இது குறித்து, புறங்கனியைச் சேர்ந்த வெங்கடேசன், 71; பண்டரக் கோட்டை நல்லுார்பாளையத்தைச் சேர்ந்த தயாளன், 40; ஆகியோர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில், ஆர்.ஐ., ஆதித்ய கரிகாலன், கோட்ட கலால் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் 2 கடைகளுக்கும் நேற்று சீல் வைத்தனர்.

