ADDED : அக் 27, 2026 06:48 AM

ராமநத்தம்: ஆவட்டி அருகே 2 கோவில்களின் உண்டியலில் ரூ. 75 ஆயிரம் காணிக்கைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆவட்டி அடுத்த மேல் ஆதனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் உண்டியல் நேற்று திருடு போயிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடியபோது, கோவில் பின்புறமுள்ள குளத்தில் உண்டியல் திறந்த கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணம் திருடு போயிருந்தது.
மற்றொரு சம்பவம்:
ஆவட்டி அடுத்த ஆ.குடிகாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி நேற்று முன்தினம் மாலை கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம் போல் நேற்று மாலை 5 மணிக்கு கோவிலை திறக்க சென்றபோது, காணிக்கை உண்டியல் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகார்களின் பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சம்பவ இடங்களை பார்வையிட்ட, சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரு கோவில்களிலும், நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் நுழைந்து உண்டியல்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
