sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2036 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற தீவிர பயிற்சி வில்வித்தை பயிற்சியாளர் கமலேஸ்வரன் பெருமிதம்

/

2036 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற தீவிர பயிற்சி வில்வித்தை பயிற்சியாளர் கமலேஸ்வரன் பெருமிதம்

2036 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற தீவிர பயிற்சி வில்வித்தை பயிற்சியாளர் கமலேஸ்வரன் பெருமிதம்

2036 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற தீவிர பயிற்சி வில்வித்தை பயிற்சியாளர் கமலேஸ்வரன் பெருமிதம்


ADDED : ஆக 21, 2025 07:48 AM

Google News

ADDED : ஆக 21, 2025 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: இந்தியாவில் வரும் 2036ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் எனது மாணவர்கள் பதக்கங்கள் பெறுவதை காண ஆவலுடன் பயிற்சி தருகிறேன்' என வில்வித்தை பயிற்சியாளர் க மலேஸ்வரன் பெருமிதத்துடன் கூறினார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கீழ்இருளம்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழறிஞர் ஜெகதீஸ்வரன் மகன் கமலேஸ்வரன், 41. ரைட் ஷாட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் வில்வித்தை பயிற்சியாளர். தமிழ்நாடு மர்தானி விளையாட்டு சங்கத் தலைவர். தமிழ்நாடு ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு சங்க பொதுச் செயலாளர். மேலும், பாரம்பரிய ஷாவ்லில் வுஷூ (குங்ஃபூ), 33ம் தலைமுறை பயிற்சியாளர்.

இவர் கூறுகையில், 'கடந்த 2017 ஜூலை, வில்வித்தை பயிற்சி பெற துவங்கிய சில நாட்களில் பொருளாதார வசதியின்மை காரணமாக தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் போனது.

தொடர்ந்து 2018ல், சென்னை ராயல் கிங் வில்வித்தை அகாடமியில் நண்பர் கட்சியப்பன் உதவியுடன் வில்வித்தை பயிற்சி பெற்றேன். 2010 முதல், வுஷூ (குங்ஃபூ) பயிற்சி பெற்றதால், வில்வித்தைக்கு தேவையான உடற்பயிற்சிகளை, அங்கு பயிற்சிக்கு வருவோருக்கு என்னால் கொடுக்க முடிந்தது.

எனக்குள் இருந்த ஆர்வம், அங்கேயே வில்வித்தை பயிற்சி அளிப்பதை தொடர்ந்தேன். பிறகு கொரோனா ஊரடங்கு காலத்தில், மீண்டும் ஒரு பெரிய இடைவெளி வந்தது.

அதன்பின், 2022ல் விருத்தாசலம் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வில்வித்தை பயிற்சியாளராக, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன் மூலம் ராயல் கிங் வில்வித்தை அகாடமி உதவி யுடன் இணைந்தேன்.

அங்கு, கோடை கால பயிற்சியில் பயிற்சியாளராக இணைந்தேன். தொடர்ந்து, பள்ளிகளிலும் பயிற்சி கொடுக்க துவங்கினேன். இதற்கு, மாணவர்களிடம் மிகுந்த ஆர்வம் இருப்பதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். முதல் போட்டியாக தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (டிஏஏடி) நடத்திய மாநில அளவிலான போட்டியில், எனது மாணவர்களில் இருவர், 12 வயதிற்குட்பட்டோர் (indian bow) பிரிவில் பங்கேற்றனர்.

அதில், சர்வேஷ் என்ற மாண வன் 360க்கு 328 புள்ளிகள் பெற்று, நான்காமிடம் பிடித்தார். இது மகிழ்ச்சியுடன் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. தொடர்ந்து, பல மாணவர்கள் ஆர்வத்துடன், தொடர் பயிற்சி வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், சென்னை ராயல் கிங் வில்வித்தை அகாடமி மூலம் ரைட் ஷாட் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி யளித்து வருகிறேன்.

தற்போது பல மாணவர்கள் Indian bow, Recurve bow மற்றும் Compound bow ஆகிய மூன்று பிரிவிலும் பயிற்சி பெற்று வருகின்றனர். இன்டர் கிளப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றனர்.

சமீபத்தில் சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரியில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான போட்டியில், மாணவர்கள் சுதர்ஷன் மற்றும் கனிஷ் ஆகியோர் மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

சிறு வயது முதலே விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு கிடைக்காத பல வாய்ப்புகளை என் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு மேலும் பல புகழ் பெற்றுத் தருவேன்.

என் மாணவர்களுக்கு இந்திய வில்வித்தை சங்கம் நடத்தும் தேசிய அளவிலான போட்டியில் பல பதக்கங்களை பெற்றுத்தந்த சிறந்த பயிற்சியாளர்களை கொண்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் 2036ல் இந்தியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் எங்கள் மாணவர்கள் பதக்கங்கள் பெறுவதை காண ஆவலுடன் எதிர்நோக்கி பயிற்சி தருகிறேன்' என்றார்.






      Dinamalar
      Follow us