/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்
/
மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்
ADDED : ஏப் 02, 2025 05:07 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பிரிவுகளில் இரண்டு ஆண்டுகள் பணி முடித்த தாசில்தார்கள் 25 பேர் பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடலுார் தாசில்தார் பலராமன், மாவட்ட நிலம் எடுப்பு இசைவு தீர்ப்பாயத்திற்கும், பண்ருட்டி ஆனந்த், சிதம்பரம் ஆலயம் நிலங்கள் தனி தாசில்தாராகவும், சிதம்பரம் ஹேமா ஆனந்தி, டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளராகவும், புவனகிரி தனபதி என்.எல்.சி., தொடர்பு அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திட்டக்குடி அந்தோணிராஜ், தேசிய நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு பிரிவுக்கும், கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் அருள்சத்யா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் துறைக்கும், விருத்தாசலம் டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர் செல்வமணி விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேப் போன்று, மாவட்டம் முழுதும் பல்வேறு தாலுகாவில் 25 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணி இடத்தில் உடன் பணியேற்க வேண்டும். இடமாறுதல் குறித்து விடுப்போ, மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளமாட்டாது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

