sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பதவி உயர்வு கிடைக்காமல் 280 எஸ்.ஐ.,க்கள் ஏமாற்றம்

/

பதவி உயர்வு கிடைக்காமல் 280 எஸ்.ஐ.,க்கள் ஏமாற்றம்

பதவி உயர்வு கிடைக்காமல் 280 எஸ்.ஐ.,க்கள் ஏமாற்றம்

பதவி உயர்வு கிடைக்காமல் 280 எஸ்.ஐ.,க்கள் ஏமாற்றம்


ADDED : ஜூன் 30, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : முதல்வர் அறிவிப்பு வெளியிட்டும், அரசாணை வெளியிடாததால் 280 சப் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 2011ம் ஆண்டு 1095 நேரடி உதவி ஆய்வாளர்கள் ஆண், பெண் என இருபாலரும் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்கள் 2011ம் ஆண்டில் பயிற்சி முடித்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளாக சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயது 60 என உயர்த்தியதாலும், காவல் துறையில் நிர்வாக குறைபாடு காரணமாக பதவி உயர்வில் பல சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

இதனை கருத்தில் கொண்ட அரசு மற்றும் காவல் துறை நிர்வாகம் சப் இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள 280 பேரை இன்ஸ்பெக்டர் நிலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல கட்ட முயற்சிக்கு பின்பு கடந்த ஏப்., மாதம் 29ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, முதல்வர் ஸ்டாலின், 'சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், 27வது அறிவிப்பாக சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், அன்றாட அவசர நிலைகளை கையாளவும், பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும்.

இதன் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புடன், அறிவிப்பு வெளியிட்ட காவலர்கள் பதவி உயர்வு, மகளிர் காவலர்கள் திருமணத்திற்கு பணம் வழங்குவது போன்ற பல அறிவிப்புகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு அவை செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது.

ஆனால், 280 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை உருவாக்கம் செய்யும் அரசாணை மட்டும், இரண்டு மாதங்களாகியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பதவி உயர்வு வந்து விடும் என்று நம்பிக்கையாக இருந்த பலரும், அரசாணை வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பதவி உயர்வு வரும் சமயத்தில் ஏதாவது தண்டனை வழங்கப்பட்டால் பதவி உயர்வு வழங்கப்படாது என்பது விதி. இதனால் பலரும் விடுப்பு எடுத்து சென்று விடுகின்றனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன்களில் அன்றாட பணிகளை கவனிக்க சப் இன்ஸ்பெக்டர்கள் இல்லாத நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us