ADDED : அக் 03, 2025 01:53 AM
பெண்ணாடம்: காந்தி ஜெயந்தியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி கடலுார் மாவட்டத்தில் நேற்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. இருப்பினும் தடையை மீறி பெண்ணாடத்தில் மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காரையூரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த தர்மதுரை, 33; போலீசார் கைது செய்து, 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்:
பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை செய்த சிறுவத்துார் கேசவன் மகன் சுசீந்திரன்,18; மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 128 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.