UPDATED : அக் 31, 2026 10:38 PM
ADDED : அக் 31, 2026 10:36 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: சாலையில் பைக்கை நிறுத்தி வைத்ததை தட்டி கேட்டவருக்கு கொலைமிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பொன்னியப்பன்,22; அதே பகுதியை சேர்ந்த சந்துரு, மாயவேல், சந்திரசேகர் ஆகிய 3 பேரும் விலங்கல்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பைக்கை சாலையில் நிறுத்தி பேசிக் கொண்டிருந்தனர். அதனை பொன்னியப்பன் தட்டி கேட்டார்.
அதில் ஆத்திரமடைந்த சந்துரு உள்ளிட்ட மூவரும் சேர்ந்த பொன்னியப்பனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த பொன்னியப்பன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, சந்துரு, மாயவேல், சந்திரசேகர் ஆகியோரை தேடிவருகின்றனர்.
