/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கோடை மழை
/
மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கோடை மழை
ADDED : மே 20, 2025 07:47 AM
கடலுார் : மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 117 மி.மீ., மழை பதிவானது.
கடலுார் மாவட்டத்தில் கோடை மழையால் கத்திரி வெயில் தாக்கம் தனிந்து குளிர் காற்று வீசுகிறது. நேற்று மூன்றாவது நாளாக மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.,யில் வருமாறு:
அண்ணாமலைநகர் 117, லால்பேட்டை, வேப்பூர் 107, காட்டுமயிலுார் 90, ஸ்ரீமுஷ்ணம் 89.1, மேமாத்துார் 88, சிதம்பரம் 86, வானமாதேவி 84.4, விருத்தாசலம் 76, காட்டுமன்னார்கோவில் 75.6, புவனகிரி 59, குப்பநத்தம் 58.4, பெலாந்துரை 57.4, பரங்கிப்பேட்டை 55.4, சேத்தியாத்தோப்பு 54, லக்கூர் 47.2, கலெக்டர் அலுவலகம் 43.9, தொழுதுார் 43.2, கடலுார் 40, பண்ருட்டி 36, கீழ்செருவாய், 30.6, குறிஞ்சிப்பாடி, வானமாதேவி 27, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 25, கொத்தவாச்சேரி 24 அளவில் மழை பெய்தது.
மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் டெல்டாவில் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.