/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது
/
நெய்வேலியில் கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது
ADDED : நவ 20, 2025 06:08 AM
நெய்வேலி: நெய்வேலியில் கஞ்சா பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி இந்திரா நகரில் உள்ள பி.2., மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர்கள் அச்சுதன் மகன் சஞ்சய், 23; அண்ணாதுரை மகன் ரவிக்குமார், 23; ராமலிங்கம் மகன் அண்ணாதுரை, 21; முத்துசாமி மகன் ரஜிந்தர்.21; ஆகிய நால்வரும் வடக்கு மேலுார், விஷ்வா நகரில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா பதுக்கி வைத்திருந்த நால்வரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து, பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக செயல்பட்ட மூவரை தேடி வருகின்றனர்.

