/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
/
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
ADDED : நவ 20, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த களையூரை சேர்ந்த அருள் மனைவி சித்ரா,47; என்பவர் நேற்று முன்தினம் மாலை களையூர் ஏரிக்கரையில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், பைக்கை நிறுத்தி விட்டு சித்ராவின் கழுத்திலிருந்த, 5 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடினார். புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அதே பகுதியில் பதுங்கியிருந்து, விழுப்புரம் மாவட்டம், வி.அகரத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார்,21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 5 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

