/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு
/
சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு
சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு
சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு
ADDED : நவ 20, 2025 06:08 AM
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு கைதிகள் மீது, கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக சிறை காவலர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று காலை கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தினர். அப்போது சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சரத்குமார் என்ற கைதியிடம் இருந்து 29 கிராம் கஞ்சாவை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், நாகப்பட்டினம் வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் கார்த்திகேயன்,32, கொடுத்து வைத்திருந்ததாக தெரிந்தது. இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் கார்த்திகேயன், சரத்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.