/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி
/
அரசு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி
ADDED : நவ 20, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: அரசுப்பள்ளியில் நடந்த அறிவியல் நிகழ்ச்சியில் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அறிவியல் பழகு என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தப்பட்டன. பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
அறிவியல் ஆசிரியர் நடராஜன் ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆசிரியர்கள் தனலட்சுமி, சுதா ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சயில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டிகள் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

