ADDED : ஜன 02, 2026 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: -: பத்திரக்கோட்டையில் சூதாடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு போலீசார் பத்திரக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சிக்குப்பம் மதுரைவீரன் கோவில் பின்புறம் சூதாட்டம் நடப்பதாக, கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்தனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிய பட்டிக்குப்பத்தை சேர்ந்த திருமுருகன், 45; திருநாவுக்கரசு, 33; தாமோதரன்,35; புஷ்பராஜ், 30; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

