/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அருகே வீடு புகுந்து திருட்டு வேப்பூர் ஆசாமி உட்பட 4 பேர் கைது

ADDED : நவ 18, 2024 06:24 AM
கடலுார் : கடலுார் அருகே பல்வேறு இடங்களில் வீடு புகுந்து நகைகள் திருடிய வழக்கில், வேப்பூரை சேர்ந்த பிரபல திருடன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டிச்சாவடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். உச்சிமேடு அருகில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதிலிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சியை சேர்ந்த சஜ்ஜீவ், 38; கடலுார் முதுநகர் அடுத்த காரைக்காடு குணசேகரன்,54; கே.என்.பேட்டை அரிக்குமார்,35; திருப்பாதிரிப்புலியூர் சரவணன், 48; என்பது தெரிந்தது. இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சிமேடு, பெரியகங்கணாங்குப்பம் பகுதிகளில் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். சஜ்ஜீவ் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.
ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து சஜ்ஜீவ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.