sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார்- பஸ் மோதல் 5 பேர் படுகாயம்

/

கார்- பஸ் மோதல் 5 பேர் படுகாயம்

கார்- பஸ் மோதல் 5 பேர் படுகாயம்

கார்- பஸ் மோதல் 5 பேர் படுகாயம்


ADDED : ஜன 07, 2024 05:45 AM

Google News

ADDED : ஜன 07, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த தொப்பையான்குப்பத்தை சேர்ந்தவர் செஞ்சிவேல் மகன் பிரபுதேவா, 27; இவர், நேற்று முன்தினம் இரவு, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தயாநிதி, 18; என்பவரை சென்னை கல்லூரியில் விடுவதற்காக காரில் அழைத்து சென்றார். இரவு 10:00 மணியளவில், குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் டிராவல்ஸ் பஸ், கார் மீது மோதியது.

இந்த விபத்தில் பிரபுதேவா, தயாநிதி, சாலையை கடந்த கோதண்டராமபுரம் பகுதியை சேர்ந்த, அஞ்சலை, 60; பஸ் டிரைவர் கோயம்புத்தூரை சேர்ந்த, சரவணன், 40; பஸ் பயணி கோயம்புத்தூரை சேர்ந்த, இருதயமேரி, 58; ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us