/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி பெண்ணாடத்தில் கால்நடை வளர்ப்போர் பீதி

ADDED : மே 20, 2025 12:24 AM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில், மர்ம விலங்கு கடித்து மீண்டும் 6 ஆடுகள் இறந்ததால், கால்நடை வளர்ப்போம் அச்சமடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சோழன் நகரைச் சேர்ந்தவர்கள் கொடியரசு, இருதயராஜ் மனைவி மேரி. இருவரும் தலா 10 ஆடுகள் வளர்க்கின்றனர். மழை காரணமாக வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் மர்ம விலங்கு புகுந்து கடித்ததில் கொடியரசுவின் 5 ஆடுகள், மேரியின் 7 ஆடுகளை கடித்து இறந்தன. இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல், கொடியரசு, மேரி இருவரும் ஆட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, கொடியரசுவின் 4 ஆடுகள் மற்றும் மேரியின் 2 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். கடந்த இரண்டு நாட்களில் 18 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்தததால் மக்கள் பீதியில் உள்ளனர்.