/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
/
குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
ADDED : பிப் 16, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தென் நெற்குணத்தை சேர்ந்தவர் ஆனந்த்,35; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராணி மற்றும் 3 வயது மகன் டீனேஷ் ஆகியோர் விட்லாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தனர்.
நேற்று மதியம் 12:30 மணியளவில், ராணியின் தாய் வீட்டருகே விளையாடிய டீனேஷ் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடிய நிலையில், ஒரு மணி நேரம் கழித்து வீட்டின் அருகே உள்ள குட்டையில் மூழ்கி குழந்தை டீனேஷ் இறந்தது தெரியவந்தது.ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.