/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்சி பொருளான குடிநீர் தேக்க தொட்டி
/
காட்சி பொருளான குடிநீர் தேக்க தொட்டி
ADDED : செப் 25, 2024 11:40 PM

நடுவீரப்பட்டு : சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் கசிவு காரணமாக, தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பழைய காலனியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் நல நிதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதிய நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றினர். அப்போது, அதில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது.
இதனால் அதில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய மேல்நிலை நீர்தேக்க கட்டப்பட்டுள்ள இடம் முழுவதும் புதர் மண்டி உள்ளது. எனவே, அண்ணாகிராம ஒன்றிய அதிகாரிகள் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, கசிவை சரி செய்து தண்ணீர் ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

