/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு வலை
/
செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு வலை
ADDED : அக் 24, 2025 03:11 AM
திட்டக்குடி: திட்டக்குடி அருகே வயலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த மேலுாரைச் சேர்ந்தவர் மாயவேல் மனைவி பழனியம்மாள், 55; இவர் நேற்று முன்தினம் மாலை 3:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்ன வாய்க்கால் அருகே சென்றபோது, அவ்வழியே நடந்து வந்த வாலிபர் ஒருவர் பழனியம்மாள் அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். பழனியம்மாள் கூச்சலிட அருகில் உள்ளவர்கள் ஓடிவதற்குள் மர்ம நபர் தப்பி சென்றார்.
புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து செயின் பறிக்க முயற்சி செய்த மர்ம நபர் யார் என விசாரிக்கின்றனர்.

