/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரிய கண்டியங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை தேவை
/
பெரிய கண்டியங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை தேவை
ADDED : செப் 23, 2024 07:54 AM
விருத்தாசலம்: பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இக்கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் -ஆலடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்குசென்று பஸ் ஏறிச் செல்வது வழக்கம்.
இந்த பஸ் நிறுத்ததில் பயணியர் நிழற்குடை இல்லாததால், கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.
எனவே, கிராம மக்கள் நலன் கருதி, பெரியகண்டியங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.