/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரும் 13ம் தேதி லோக் அதாலத் நீதிபதி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
/
வரும் 13ம் தேதி லோக் அதாலத் நீதிபதி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
வரும் 13ம் தேதி லோக் அதாலத் நீதிபதி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
வரும் 13ம் தேதி லோக் அதாலத் நீதிபதி தலைமையில் ஆய்வுக்கூட்டம்
ADDED : ஆக 29, 2025 11:48 PM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், வரும் 13ம் தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் கடலுாரில் நேற்று நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திரா தேவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வரும் 13ம் தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிக அளவிலான வழக்குகளுக்கு தீர்வு காண்பது என முடிவு எடுக்கப்பட்டது. குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஷோபனா தேவி, மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி குலசேகரன், முதலாவது மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி ஆனந்தன்.
இரண்டாவது மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி பிரகாஷ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ் கண்ணன்.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தனம் மற்றும் நீதிபதிகள், டி.ஆர்.ஓ.,ராஜசேகரன், எஸ்.பி.,ஜெயக்குமார், கடலுார் பார் அசோசியேஷன் மற்றும் லாயர்ஸ் அசோசியேஷன் வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், நில எடுப்பு அதிகாரிகள், மின்சாரதுறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் காணொலி காட்சி மூலமாகவும் வாயிலாகவும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.