/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு: நீர்நிலைகளில் வழிபாடு
/
மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு: நீர்நிலைகளில் வழிபாடு
ADDED : ஆக 04, 2025 07:05 AM

சிதம்பரம் : கடலுார் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி புதுமண தம்பதியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
சிதம்பரம், வல்லம்படுகை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காலை முதலே கொள்ளிடம் ஆற்றங்கரையில் குவிந்தனர்.
புதுமணத் தம்பதிகள், தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு தாலியை பிரித்து கோர்த்து காவிரி அன்னைக்கு படைத்து அணிந்து கொண்டனர்.
பொதுமக்கள் மாவிளக்கு போட் டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து பூஜை செய்து, தீபாராதனை செய்து வழிபட்ட னர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க உற்சவ மூர்த்தியான சந்திரசேகரர் கொள்ளிடம் ஆற்றுக்கு தீட்சிதர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் தீர்த்தவாரி நடந்தது.
இதேப் போன்று, கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரை, பெண்ணையாறு, விருத்தாசலம் மணிமுக்தாறு, புவனகிரி வெள்ளாறு, சேத்தியாத்தோப்பு வீராணம் ஏரியில் பூதங்குடி மதகு, வாழைக்கொல்லை மதகு, கந்தகுமரன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் புதுமண தம்பதிகள் வழிபாடு செய்தனர்.