/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து 9 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: 5 பேர் ஆப்சென்ட்
/
வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து 9 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: 5 பேர் ஆப்சென்ட்
வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து 9 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: 5 பேர் ஆப்சென்ட்
வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து 9 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: 5 பேர் ஆப்சென்ட்
ADDED : ஜன 20, 2024 06:14 AM

பரங்கிப்பேட்டை : வளர்ச்சி பணிகள் செய்ய பொது நிதியில் இருந்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து நேற்று நடந்த ஒன்றியக்குழு கூட்டத்திற்கு செல்லாமல், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., என 9 கவுன்சிலர்கள் புறக்கணித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடக்க இருந்தது.
கூட்டத்தில், பங்கேற்க சேர்மன் கருணாநிதி, துணை சேர்மன் மோகனசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் விஜயா, சதீஷ்குமார், துணை பி.டி.ஓ., நித்யா மற்றும் கவுன்சிலர்கள் 13 பேர் வந்திருந்தனர்.
ஆனால், கூட்டம் நடப்பதற்கு முன்பே, அ.தி.மு.க., 5 , தி.மு.க., 3 , பா.ம.க.,- தே.மு.தி.க., தலா ஒரு கவுன்சிலர் என மொத்தம் 9 கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வெளியே வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், பொது நிதியிலிருந்து வளர்ச்சி பணிகள் செய்ய கவுன்சிலர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கவுன்சிலர்கள் செய்த வளர்ச்சி பணிகளுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நிதி வழங்கப்படவில்லை. இதனால், கடன் வாங்கி வளர்ச்சி பணி செய்த கவுன்சிலர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்ததாக கூறினர்.
9 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்ததால் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடக்கவில்லை. மேலும் கூட்டம் நடப்பது குறித்தும்,அதற்கான அஜண்டாவை கூட்டம் நடக்கும் அன்று காலை கொடுத்ததால் 5 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவரவில்லை. கூட்டத்திற்கு முன்கூட்டியே அஜண்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.