/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுக்கு சாலைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு
/
குறுக்கு சாலைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 18, 2025 06:13 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் அதிகமான குறுக்கு சாலைகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு பின், மந்தாரக்குப்பம் முதல் ரோமா புரி வரை 5 கி.மீ. , துாரத்திற்கு சென்டர் மீடிய னுடன் வடிகால் அமைக்கும் பணி நடந்தது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்டர் மீடியனில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குறுக்கு சாலை அமைத்தனர்.
இதனால், மந்தாரக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் கடை, வீடுகளுக்கு எளிதாக செல்ல சென்டர் மீடியனை சுற்றி செல்ல சிரமம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க சென்டர் மீடியனில் வாகனங்கள் செல்ல வசதியாக பல்வேறு இடங்களில் தடுப்புச் சுவரை இடித்து வழி ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் குறுக்கு சாலையில் திரும்புவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் குறுக்குச்சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.