ADDED : செப் 06, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் ஏற்படும் விபத்தை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் கடலுார்- சித்துார் சாலை, காந்தி சாலை ( கடலுார் - சங்கராபுரம் இணைப்பு சாலை), கொக்குப்பாளையம் செல்லும் சாலை என நான்குமுனை சந்திப்பாக உள்ளது. உளுந்துார்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக காந்திசாலை வழியாக பண்ருட்டி நகருக்கு செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.