தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தாழங்குடாவிற்கு கூடுதல் பஸ் இயக்கம்; கடலூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

தாழங்குடாவிற்கு கூடுதல் பஸ் இயக்கம்; கடலூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

தாழங்குடாவிற்கு கூடுதல் பஸ் இயக்கம்; கடலூர் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஜன 09, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2024 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுாரிலிருந்து தாழங்குடாவிற்கு கூடுதல் அரசு பஸ் சேவையை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

தாழங்குடா பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் நலன் கருதி கடலுாருக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க அய்யப்பன் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்தார். தாழங்குடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பஸ் சேவையை துவக்கி வைத்தார்.

அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பொது மேலாளர் ராஜா, உதவி மேலாளர் (வணிகம்) ரகுராமன், ஊராட்சித் தலைவர் சாந்தி மதியழகன் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த பஸ் தினமும் காலை 5:00 மணி, 8:30 மணி, மதியம் 1:30 மணி, மாலை 5:00 மணி என நான்கு முறை இயக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us