/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் அரசு கல்லுாரியில் மாணவர்கள் சேர்ப்பு

ADDED : செப் 21, 2024 06:40 AM

கிள்ளை: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நேற்று சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படி என்ற சிறப்பு நிகழ்ச்சி காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வி முடித்து, கல்லுாரியில் சேர 16 மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். கலெக்டர் அனுமதி மூலம் நேற்று சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரில் விருப்பம் தெரிவித்த 16 மாணவர்கள் கல்லுாரி முதல்வர் அர்ச்சுணன் தலைமையில் சேர்க்கப்பட்டனர்.
சேர்க்கைக்குழு உறுப்பினர்கள் டார்லின் குயின், ராஜேந்திரன், சுடர்விழி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.