/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை
/
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை
மகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 25, 2025 10:52 PM
க டலுார் அடுத்த பூண்டியாங்குப்பம் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி பல சாதனைகளை படைத்து முன்னணி கல்லுாரியாக திகழ்கிறது என, மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் டி.எம்.எல்.டி., - டி.எம்.இ., -டி.இ.இ.இ., - டி.அக்ரி., - டி.இ.சி.இ.,-சிவில், கம்ப்யூட்டர் டிப்ளமோ பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை.
சேரும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் கல்லுாரி பஸ் பயணம் இலவசம். அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் தமிழக அரசின் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகை பெறலாம்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம்.
இந்தாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் எந்த பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் லேட்டரல் என்ட்ரி மூலம் பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம்.
பயிற்சி முடித்த மாணவர்கள் பலர், அரசு மற்றும் தனியார் துறையிலும், பல முன்னணி தொழிற்சாலைகளிலும், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் இயங்கும் மகாலட்சுமி ஓட்டல் மேனேஜ்மெண்ட் அன்டு கேட்டரிங் கல்லுாரி, அழகப்பா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மூன்றாண்டு பி.எஸ்.சி., டிப்ளமோ மற்றும் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு கேட்ரிங் பயிற்சி வழங்கி வருகிறது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அரசின் ஓராண்டு புட் புரோடெக்சன் மற்றும் புட் பேவரேஜ் சர்வீஸ் கோர்ஸில் சேர்க்கை பெறலாம்.
ஐ.டி.ஐ., இலவச சேர்க்கை கடலுார் மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் மகாலட்சுமி ஐ.டி.ஐ., மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்று இயங்குகிறது. இங்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஏ.சி., மெக்கானிக், எலக்ட்ரீஷியன், பிட்டர், எம்.எம்.வி., ஒயர்மேன் மற்றும் வெல்டிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேர்க்கை பெறலாம்.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் வரும் 150 மாணவர்களுக்கு மட்டும் இலவச ஐ.டி.ஐ., சேர்க்கை நடக்கிறது. 36 ஆண்டுகள் கல்வி பணியில் அனுபவம் வாய்ந்த மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் மகாலட்சுமி பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மற்றும் கேட்ரிங் ஆகியவற்றில் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.