/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் தயக்கம்
/
கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் தயக்கம்
கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் தயக்கம்
கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் தயக்கம்
ADDED : மார் 13, 2024 06:51 AM
கடலுார் : கடலுார் லோக் சபா தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் தயக்கம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், கடலுார் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளும், சிதம்பரம் லோக்பா தொகுதியில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2019 லோக் சபாதேர்தலில், கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில், பா.ம.க., வை சேர்ந்த கோவிந்தசாமியும், தி.மு.க., சார்பில் ரமேஷ் போட்டியிட்டனர். இதில், ரமேஷ் வெற்றி பெற்றார்.
இதேபோன்று, சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சந்திரசேகரன் மற்றும் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டனர். இதில், திருமாவளவன் வெற்றி பெற்றார்.
கடந்த சட்டசபை தேர்தலில், கடலுார் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், அதிகளவில் பணம் செலவு செய்தும் தோல்வியடைந்தார். இதனால், வரும் லோக் சபா தேர்தலில் கடலுார் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் தயக்கம் காட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலில் அதிகளவில் பணம் செலவு செய்தாலும், வெற்றி பெற முடியுமா என்ற மனநிலையில் அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.
மேலும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கருதுகின்றனர். இதனால், கடலுார் தொகுதி அ.தி.மு.க.,வில் தேர்தல் களம் சூடுபிடிக்காமல் உள்ளது.

