/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா நெல் பயிர்களுக்கு காப்பீடு வேளாண் துறை அறிவுறுத்தல்
/
சம்பா நெல் பயிர்களுக்கு காப்பீடு வேளாண் துறை அறிவுறுத்தல்
சம்பா நெல் பயிர்களுக்கு காப்பீடு வேளாண் துறை அறிவுறுத்தல்
சம்பா நெல் பயிர்களுக்கு காப்பீடு வேளாண் துறை அறிவுறுத்தல்
ADDED : அக் 25, 2025 11:16 PM
விருத்தாசலம்: சம்பா நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
மாவட்ட விவசாயிகள் 2025 - 26ம் ஆண்டு ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் நெல், உளுந்து பயிர்களுக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதன்மூலம், இயற்கை இடர்பாடுகளில் இருந்து ஏற்படும் இழப்பீடுகளில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
பயிர்காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு கொண்டு வந்து, இ சேவை மையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தலாம்.
ஏக்கர் ஒன்றுக்கு சம்பா நெற் பயிர்களுக்கு ரூ. 564, உளுந்து பயிர்களுக்கு ரூ.255 கட்டணம் செலுத்த வேண்டும். வரும் நவம்பர் 15ம் தேதி வரை காப்பீடு செய்யலாம். மேலும், இது சம்பந்தமான விபரங்களுக்கு விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

