/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., 54வது ஆண்டு தொடக்க விழா
/
அ.தி.மு.க., 54வது ஆண்டு தொடக்க விழா
ADDED : அக் 19, 2025 03:13 AM

கடலுார்: அ.தி.மு.க., 54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கும், கடலுார் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், மீனவர் அணி தங்கமணி, மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் வெங்கட்ராமன், வரவேற்றார்.
ஜெ., பேரவைச் செயலாளர் கனகராஜ், தமிழ்ச்செல்வம், சிவா, பேரூராட்சி செயலாளர் அர்ச்ஜூனன், இளைஞரணி செயலாளர் திரு, இலக்கிய அணி ஏழுமலை, வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.